Thursday, June 10, 2010

மரணம் கூட சுகம் தான்
உன்னை பிரிந்து வாழும் நொடிகளில் !

Saturday, March 27, 2010

என் தோழிக்கு !




என்ன செய்தோம்

உன் முகம் பார்த்த நானும்

என் முகம் பார்த்த நீயும் அறியவில்லை அன்று

நம் நட்பின் மரம் இவ்வளவு பெரிதென்று

வகுப்பில் பார்த்த முகம் என் வீட்டருகில்

சந்தோசத்தில் துள்ளி குதிக்கவில்லை

ஆனாலும் மனம் முழுவதும் மகிழ்ச்சி

என் கண்ணிலும் ......

இருப்பினும் ஒட்டவில்லை

உனக்காக நான் என்ன செய்தேன்

தெரியவில்லை

எனக்காக நிறைய செய்தாய்

நான் இருக்கும் நேரத்தில் எனக்காக நீ பேசியதை விட

நான் இல்லாத நாட்களில் எனக்காக நீ பேசியதே அதிகம்

யோசித்தேன் தப்பித்தவறி நாம் இவளுக்கு ஏதோ செய்ய இவள்

நம்மிடம் அன்பாக இருக்கிறாளோ?

இல்லை...

இல்லவே இல்லை

நட்பின் இலக்கணமே எதையும் எதிர் பார்ப்பது இல்லை

தாய்,தந்தை, ஆசிரியர் கற்று கொடுத்தது சில அனுபவம் என்றால்

நட்பை பற்றி கற்று கொடுத்தது என் தோழி தான்

அவள் என் தாயாய் இருந்திரிக்கிறாள்

தந்தை போல் கண்டித்திருக்கிறாள்

இத்தனை செய்தவள் தோழியின் கடமையை செய்யமாட்டாளா?

செவ்வனே செய்து கொண்டிருக்கிறாள்

தெரியவில்லை, பல பேருக்கு

நட்பு இப்படி இருக்குமா என்று

இவளிடம் இருந்தால் நட்பு நிச்சயம் அப்படித்தான் இருக்கும்

கொடுத்து வைத்திருக்கிறேன் இவளை நான் என் தோழியாய் அடைய

என் தாயின் நட்பு பற்றி எனக்கு தெரியாது

என் மகளோ மகனோ அவர்களின் நட்பு எப்படி இருக்கும் ,தெரியாது

ஆனால் எனக்கு கிடைத்த பரிசு அவள்,

பாதுகாப்புடன் வைத்துக்கொள்வேன்

ஒரு வேலை ஊடல் இல்லாததால் தான் நட்பு இவ்வளவு பலம்மோ?

கேட்கலாம் பலபேர்,

ஊடல் கொண்டாலும் கூட வேண்டும்என்று அவளும் நானும்

பிராதிப்பதால்தான் என்று மகிழ்ச்சியாய் சொல்வேன்

என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என் தோழிக்கு

என் அன்பு ஒன்றே நான் தருகிறேன்

போதுமா?

Tuesday, January 19, 2010

ஜீரணிக்க தான் வேண்டும்


சில துயரங்களை

சில பிரிவுகளை

மிக எளிதாய் கூறிவிடுகிறார்கள்







அவர்களுக்கு என்ன தெரியும் முழுங்க கூட முடியாமல்

தொண்டையினில் சிக்கி இருக்கும் என் துயரத்தை!

Tuesday, December 8, 2009

உன் பிரிவால்


நாம் இருந்த இடத்தில் தனிமையில் வாழ முடியவில்லை

நீ கலட்டிய செருப்பு

உன் வண்டி

மிச்சம் வைத்த இனிப்பு

எல்லாமே என்னை கலங்க வைக்கிறது

வந்தேன் அம்மா வீட்டிற்கு

அம்மாவின் அன்பு

தம்பியிடம் அரட்டை

அப்பாவின் கவனிப்பு

இருந்தும் வெறுமை சூழ்கிறது



மாமியார் வீட்டிற்கு சென்றேன்

உன் நினைவுத்  தடங்களை கொண்டு வாழலாம் என்று

நீ அமர்ந்த இடம்

உன் சிரிப்பால் வெட்கம் கொண்ட இடம்

உன் கண்களால் என்னை தேடும் இடம்

அப்பப்பா

போதுமடா

நீ இல்லாமல் சொர்கம் என்றாலும் ______________________

புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்



காதலுடன்

உன்னவள்

Thursday, December 3, 2009

காத்திருக்கிறேன் உனக்காக!




பிரசவத்தின் போது குழந்தைக்காக

தாய் காத்திருப்பது போல்

பருவ மழைக்காக

விவசாயி காத்திருப்பது போல்

மலரப்போகும் பூவுக்காக

வண்டு காத்திருப்பது போல்

ஆசையாய்

ஏக்கமாய்

கண்களில் கனவுகளுடன்

உதடுகளில் புன்னகையுடன்

மனத்தின் புன்னகைக்காக

காத்துகொண்டிருக்கிறேன்!

Sunday, November 15, 2009

என்னால் முடியவில்லை
மழையால் முடிகிறது
ஆம் என்னால் முடியவில்லை
 ஆனால் மழையால் முடிகிறது

உன் பிரிவால் நான் வடிக்கும்
கண்ணீரை வெளியே காட்ட
முடியவில்லை

எனக்கு பதில் மழை பெய்து
காட்டுகிறது
பார்த்துக்கொள் அன்பே!

Thursday, November 12, 2009

கண்ணீருக்கு விலை அதிகம்
உன்னால் வந்தால்
புன்னகைக்கு விலை அதிகம்
உன்னால் நான் அடைந்தால்
பூவுக்கு விலை அதிகம்
உன் கையால் அணிந்தால்
மௌன மொழிக்கு விலை அதிகம்
நம் இரு கண்களும் பேசினால்
அனைத்தும் நான் அடைந்தேன்

ஆனால் எந்த விலை கொடுத்தும்
உன் பிரிவை நான் பெறவில்லை
தீயாய் எரிகின்றது
இப்பிரிவு வேண்டாம் கண்ணா
என் அருகில் வந்து விடு!