Thursday, June 10, 2010

மரணம் கூட சுகம் தான்
உன்னை பிரிந்து வாழும் நொடிகளில் !

Saturday, March 27, 2010

என் தோழிக்கு !




என்ன செய்தோம்

உன் முகம் பார்த்த நானும்

என் முகம் பார்த்த நீயும் அறியவில்லை அன்று

நம் நட்பின் மரம் இவ்வளவு பெரிதென்று

வகுப்பில் பார்த்த முகம் என் வீட்டருகில்

சந்தோசத்தில் துள்ளி குதிக்கவில்லை

ஆனாலும் மனம் முழுவதும் மகிழ்ச்சி

என் கண்ணிலும் ......

இருப்பினும் ஒட்டவில்லை

உனக்காக நான் என்ன செய்தேன்

தெரியவில்லை

எனக்காக நிறைய செய்தாய்

நான் இருக்கும் நேரத்தில் எனக்காக நீ பேசியதை விட

நான் இல்லாத நாட்களில் எனக்காக நீ பேசியதே அதிகம்

யோசித்தேன் தப்பித்தவறி நாம் இவளுக்கு ஏதோ செய்ய இவள்

நம்மிடம் அன்பாக இருக்கிறாளோ?

இல்லை...

இல்லவே இல்லை

நட்பின் இலக்கணமே எதையும் எதிர் பார்ப்பது இல்லை

தாய்,தந்தை, ஆசிரியர் கற்று கொடுத்தது சில அனுபவம் என்றால்

நட்பை பற்றி கற்று கொடுத்தது என் தோழி தான்

அவள் என் தாயாய் இருந்திரிக்கிறாள்

தந்தை போல் கண்டித்திருக்கிறாள்

இத்தனை செய்தவள் தோழியின் கடமையை செய்யமாட்டாளா?

செவ்வனே செய்து கொண்டிருக்கிறாள்

தெரியவில்லை, பல பேருக்கு

நட்பு இப்படி இருக்குமா என்று

இவளிடம் இருந்தால் நட்பு நிச்சயம் அப்படித்தான் இருக்கும்

கொடுத்து வைத்திருக்கிறேன் இவளை நான் என் தோழியாய் அடைய

என் தாயின் நட்பு பற்றி எனக்கு தெரியாது

என் மகளோ மகனோ அவர்களின் நட்பு எப்படி இருக்கும் ,தெரியாது

ஆனால் எனக்கு கிடைத்த பரிசு அவள்,

பாதுகாப்புடன் வைத்துக்கொள்வேன்

ஒரு வேலை ஊடல் இல்லாததால் தான் நட்பு இவ்வளவு பலம்மோ?

கேட்கலாம் பலபேர்,

ஊடல் கொண்டாலும் கூட வேண்டும்என்று அவளும் நானும்

பிராதிப்பதால்தான் என்று மகிழ்ச்சியாய் சொல்வேன்

என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என் தோழிக்கு

என் அன்பு ஒன்றே நான் தருகிறேன்

போதுமா?

Tuesday, January 19, 2010

ஜீரணிக்க தான் வேண்டும்


சில துயரங்களை

சில பிரிவுகளை

மிக எளிதாய் கூறிவிடுகிறார்கள்







அவர்களுக்கு என்ன தெரியும் முழுங்க கூட முடியாமல்

தொண்டையினில் சிக்கி இருக்கும் என் துயரத்தை!